அந்தநாள்…

Nostalgia is a sweet word. The years between 10 and 17 are a remarkable period in our lives, shaped by the circumstances and environment in which we were raised. During this time, friends play a crucial role in shaping our character.

To this day, I cherish those memories and often find myself longing to return to one of those days. If I were ever granted a wish to rewind time for just a day, it would be to revisit that cherished past.

I sometimes feel that today’s generation, so tied to the digital world, is missing out on the real-time learning of everyday life. Hence, this write-up.

Audio File below

அந்தநாள் தொலைத்தேன்
திரும்பிச்செல்ல தவித்தேன்

பம்பரம் பழகினேன்
சாட்டை சிலிர்த்தேன்
கோலி சேர்த்தேன்
நடுவிரல் உடைத்தேன்
மயில்பீலி பொறுக்கினேன்
புத்தகத்தில் காத்தேன்
குட்டிப்போட நம்பினேன்
அரிசியிட்டு காத்திருந்தேன்
மறுத்ததால் கோபித்தேன்
தமிழுக்கு மாற்றினேன்
அரிசியும் மாற்றினேன்
மீண்டும்
மறுத்ததால்
தமிழை கோபித்தேன்

பைபிள் சேர்த்தேன்
ஸ்டாம்ப் அடுக்கினேன்
பண்டம் மாற்றினேன்
தொலைத்தபோது பிண்டமானேன்

திருடியைக்கண்டேன்
தங்கையென உணர்ந்தேன்
திறமையை ரசித்தேன்

சிலரை சேர்த்தேன்
கந்தகம் வாங்கினேன்
குப்பி சேர்த்தேன்
அம்மியில் இடித்தேன்
இடியும் வாங்கினேன்
மாஞ்சா பழகினேன்
வாய்பிளந்து வான்பார்த்தேன்
பட்டங்கள் துரத்தினேன்
வீதிகளில் ஓடினேன்
ஓய்வில்லா உதைவாங்கினேன்

தீபாவளி காத்திருந்தேன்
தங்கையை கூட்டாளியாக்கினேன்
வீதியில் நடந்தேன்
பட்டாசு
பொறுக்கினேன்
புதுத்துணி பாவித்தேன்
டெய்லர் கடை வியந்தேன்
காஜா பையன் ரசித்தேன்
அளவு முறைகள் அசந்தேன்
சாம்பிள் புத்தகம் புரிந்தேன்
அந்த நாள் காத்திருந்தேன்
தாமதம் வெறுத்தேன்
அன்றாடம் நடந்தேன்
வாங்கியபோது மகிழ்ந்தேன்

வெயிலை வீடாக்கினேன்
புழுதியில் புரண்டேன்
கல்லி கிரிக்கெட் பழகினேன்
ஜன்னல்கள் உடைத்தேன்
ஓயாமல் ஓடினேன்
நட்பில் நகர்ந்தேன்
களவும் கற்றேன்
பன்னீர் சோடா பழகினேன்
பெப்சி ஐஸ் ருசித்தேன்

கோடைக்கு காத்திருப்பேன்
மணவையில் மிதப்பேன்
ஆச்சிவீடு ஏங்குவேன்
அஞ்சறைப்பெட்டி தேடுவேன்
முட்டை ஆராய்வேன்
விளையில் விளையாடுவேன்
கழனிநீர் சுமப்பேன்
பரூத்திக்கொட்டை
அரைப்பேன்
குளத்தில் குளிப்பேன்
மாடிடம் மிதிவாங்குவேன்

மாமன்களைக்கொண்டாடினேன்
கிணத்தோரம் காத்திருப்பேன்
உரையாடல்கள் வியப்பேன்
ஏலா கோவில் ஏங்குவேன்
வயலோரேம் நடப்பேன்
நடைபாதை ரசிப்பேன்
இரவுக்கு காத்திருப்பேன்
மின்மினி பிடிப்பேன்
குப்பியில் அடைப்பேன்
விடிந்தபின் உணர்வேன்

அந்தநாள் நினைத்தேன்
ஓர்நாள் ஏங்கினேன்
திரும்பிச்செல்ல தவிக்கிறேன் !

3 thoughts on “அந்தநாள்…

  1. thanks Anand thanks for taking us through this beautiful journey and phase of life.Am sure each one of us would like to return to that beautiful world.

    Like

  2. ஒவ்வொருவரும் மனதுக்குள் நினைத்துக் கொள்ளும் நினைவுகள் தான் இவை. அன்று நாம் மலைகளில் இருந்து தொடங்கிய சிறு நீரூற்றுகள் ஆக இருந்தோம். உணர்வுகள் , உறவுகள், மனிதர்கள் உண்மையாக,அழுக்கற்றவராக இருந்தனர். அதைத் தொலைத்து விட்டோம். இப்போது பிறரைப் கவர்வதில், முந்துவதில் நம்மை மாற்றிக் கொண்டு விட்டோம். அது பொற்காலம் தான்.

    Like

  3. காலங்கள் மாறுகிறது!

    காட்சிகளும் மாறுகிறது!

    கடந்து போன நினைவுகளை அசைபோடும் போதும் தான்

    நமக்கு வயதாகிறதை உணரமுடிகிறது.

    வாழ்க தமிழ்.

    Like

Leave a reply to Anup nair Cancel reply