நாணயம்

The demonetization of 1000 Rupee and 500 Rupee notes on November 8, 2016, by the Prime Minister served as the inspiration for the script ‘நாணயம்’. Given that cash transactions play a pivotal role in trade across all scales in India, reducing them was aimed at minimizing money laundering. However, the effectiveness of this measure relies on individuals taking a wholehearted stand to ensure that every transaction is legal, involving the payment of taxes on income.

note

பெற்றோராம் நாம் இருவர்
ஒற்றை தாளில்
பலரின் புன்னகை

வேர்வை சிந்தி இங்கும்
குளிர் உரைந்து அங்கும்
நம்மை குவிக்க ஓடுகிறான் -இந்தியன்

கருப்பாம் நாம் 
பலர் பைகளில்
உலகநாயகன் மஸ்தானால்
ஓரே இரவில்
செல்லா காசானோம்

நம்மை நம்பிய
சடங்கு முடங்க
உயிர் ஊசலாட
விட்டிருக்க வேண்டாமே

பெட்டி பெட்டியாய்
அடுக்கிய நம்மை
பத்திரமாய் swissசிலிட்டான் -பணக்காரன்

சுருக்கு பையில்
திணித்த நாமும்
அஞ்சரை பெட்டியில்
அடைத்த நாமும்
மூச்சு முட்ட முழிக்கிறோம்

நம்மை விட பலசாலியாம்
நாளை அவன் நடந்தாலும்
கைக்காசே நம் புழக்கமெனில்
விரைவில் கருப்பாவான் - அவன்

ஓரே பூஜியத்தில் நான் உயர்ந்தாலும் 
பத்து பெட்டியில் அடங்குவோம் நாம்
ஐந்தே  பெட்டியில் அடங்குவான் அவன்

நாவில் இருந்திருந்தால் - நாணயம் 
நாமும் வாழ்ந்திருப்போமே
என்றதாம் ஆயிரம் , ஐநூரை பார்த்து!

                            -----என்று ஆனந்தன் -----

5 thoughts on “நாணயம்

  1. நல்லா பகடியாய் இருக்கு இந்த கவிதை. அருமை

    Like

Leave a comment