இக்கரையும் சீமையாகும் !

யுத்தமில்லா பூமியும்  
வண்ண விண்மீன்களும்
எனக்கும் ஆசைதான்

நிறைவேறும் ஆசைகளை
நாம் அடுக்குவோமே

நிழல் குடையில் நிற்கும் பேருந்து
சில்லறை அளிக்கும் நடத்துனர்
மீட்டரில் ஓடும் ஆட்டோ
வேகத்தடை வீதிகள்
ஊனமில்லா சக்கர வண்டிக்கு ஓர் சறுக்குப்பாதை

கட்டணம் இல்லா கோவில்கள்
பிஞ்சுகள் இல்லா பட்டாசுத்தொழில்
பீத்தல் இல்லா சீருடையில் மாணவர்கள் 
கடைகள் இல்லா நடை பாதைகள்
எச்சில் இல்லா இரயில் நிலையம்
மின்வெட்டு இல்லா கிராமங்கள் 
சங்கிலி இல்லா கோடைமோர் கோப்பை 

அன்பால் கண்டிக்கும் பெற்றொர்
ஆழத்தை புகட்டும் ஆசிரியர்
தாயின் பெயருள்ள விண்ணப்ப டிவங்கள்
தந்தையின் முகம் தெரிந்த பள்ளிகள்
பொழுதோடு போய் வர திறமைக்கு ஓர் பிழைப்பு

குப்பைத் தொட்டியில் குப்பைகள்
நீர் வழியம் நீர்நிலைகள்
விசாலமாய் வாழும் விவசாய்கள்
தன்னை வருத்தா பக்தர்கள்
இல்லை என சொல்லா ரேஷன் கடை
வரிசைக்கு பழகிய  நம்மக்கள்
உள்ளதைச்சொல்லி  
சொன்னதைச்செய்யும் முழு செயல் வாதிகள்
அரை-செயல்-வாதிகள் அல்ல 
என நம்மால் நிறைவேறும் ஆசைகள் 
உயிர் பெற்றால்
நாமும் சிங்கம் சிங்கப்பூர் - இக்கரையும் சீமையாகும்.
                              -----என்றும் ஆனந்தன் -----

Contact me

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

My wishes on possible things that could make our homeland heaven.