கலாம் ஐயா! -இரங்கல்

apj

விஞ்ஞானியாய்,
எழுத்தாளனாய் ,
ஆசிரியனாய் ,
தலைவனாய் 
பலகோடி இருந்தாலும் 
இவையனைத்தும் ஒர் உருவாய்
கண்ணதாசனின் வரிகளாய்
இவர்போல யாரெண்று
வாழ்ந்து வழிகாட்டிய
உம்மைபோன்ற 
மாமனிதரை 
பிரம்மனே நினைத்தாலும் 
மறுபிறவி கொடுக்கயியலாது.
                     -----என்று ஆனந்தன் -----

நா.முத்து – இரங்கல்

na-muthukumar

இது கவிதையல்ல 
ஓர் இரங்கல்

அவனுக்கும் எனக்கும் 
ஓர் பனிப்போர் என்றாலும் 
அவனை மிருகமாய் 
கோபித்த சில நாட்களில் 
Aug 14, 2016 ரும் ஒர் நாள் 
வேறு யாரை  - ஆண்டவனை.

ஆம் என் வழியால் பிறர்க்கழுத
மற்றுமோர் நாள் 
நா.முத்து  வை குமரனாகவே 
ஆண்டவன் அழைத்துச்சென்ற 
அந்த நாள்

அவரின் சில படைப்புகளை 
மட்டுமே கடந்த நான் 
உறைந்து நின்ற வரிகள் 
தேசிய விருது பெற்ற
பாடல்களுக்கல்ல 
ஒரு மகனாய்  தந்தையின் 
பாசத்தை உணர்த்திய 
இவ்வரிகளுக்காக. ...

" தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே 
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின் அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா 
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா 
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
........
........
.........
வளர்ந்ததுமே யாவரும் தீவாய்ப் போகிறோம் 
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம் 
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை "

ஜயா ஆண்டவா 
உன்னை மன்றாடிக்கேட்கிறேன்
படைப்பாளிகளை வாழ
விட்டுத்தொலையும்

அன்னாரின் ஆத்மா 
சாந்தியடைய வேறு வழியின்றி
உன்னையே வேண்டும் நான்
               -----என்று ஆனந்தன் -----

 

சதுரங்க கோட்டை

The essence of ‘சதுரங்க கோட்டை’ is rooted in the intricate nature of life. Life is a struggle, where some emerge victorious while others face setbacks, and I aimed to portray this complexity. What stands out to me in this piece is the juxtaposition of the complex game of chess with the simplicity of the game of snake and ladder.
chess_and_snake_andladder
 வாழ்க்கையது சதுரங்கம்
 கட்டங்கள் அதன்
 உறவுகளும்,  நட்பும்
 கருப்பும் வெள்ளையுமாய் !

இதில் உள்ளடங்கி
உறங்கும் பர்மபதம்

இரண்டே கட்டங்களில்
ஏற்றமும், இறக்கமும் !

ஏணியின் கட்டங்கள்
உன் எண்ணங்கள் !

நாகத்தின் கட்டங்கள் 
உன் எதிர்பார்ப்பு !

இவற்றை தாண்ட
நாம் ஞானியல்ல

ஏணி கட்டங்களில்
எண்ணங்களை உயர்த்துவோம்

நாக கட்டங்களில் 
ஏக்கத்தை குறைப்போம்

உறவுகள் உருக்கமாகும்
நட்பது இறுக்கமாகும்
வாழ்க்கை எளிமையாகும் 
பொழுது இனிமையாகும் 
               -----என்றும் ஆனந்தன் -----

பொருமை

The inspiration behind ‘பொருமை’ revolves around the mind of an average and balanced Indian. Neither a saint nor a huntsman, he meticulously evaluates his stance and issues a cautionary statement.

What captivated me in this piece is how it gradually builds frustration, expressing underlying anger. However, it subtly conveys a message about the existence of ‘Religion’ without specifying any particular faith, allowing each reader to grasp the intended message.

dormant-volcano

எலியாரே,
எட்டனிக்கும் இச்சிங்கம்
உப்பில்லா உணவருந்தி
உணர்வில்லா நிக்குமென
துள்ளி நீர் குதிக்காதீர்

காந்தியெனும் எம் தாத்தனின்
அகிம்சை உணவூட்டியதில்
மறுகன்னம் காட்டி,காட்டி
காட்ட வேறு கன்னமின்றி
கண்கள் சிவந்து
எரிமலையாய் பொதிந்துள்ளோம்

பிரித்து விட்டால்
மதித்து வாழ்வீர்
என முன்னோர் செய்த
ஒர் தவறை
பகடைக்காயாக்கி
வேர்வை சிந்தி படித்த எம்மக்களை
ஆக்கமாய் வாழவிடாமல்
அழிவுக்கு போராட வைத்து
பிண்டமா வைக்கிரீர்

யாவரும் சமம் உம்வாய்மொழியில்
எம்மையாண்ட கலாம்,
இசை மேதை ரகுமான்
உங்களில் யார்?

உறியை நீர் தொட்டீர்
அகிம்சை எல்லைக்கோட்டை
யாம் தொட்டோம்
எழுந்து மட்டும் நின்றால்
உறியடியாய் சிந்தி சிதறுவீர்
பாரதியின் வரியாய்
மோதி யாம் மிதித்தால்
உமிழ ஓர் முகமிருக்காது

வேற்று கிரகத்தான் எட்டிப்பார்த்தால்
முகம் சுளித்து விலகிச்செல்வான் !
மதம் என்ற ஆடை
உம்மை நிலைப்படுத்த
அதை ஆயுதமாக்கி
ஏனையா அம்மணமாய் நிற்கின்றீர்?

உமக்கு இறுதி எச்சரிக்கை – சீண்டாதீர்
உமது தேசம் பாலைவனம்
என அடுத்த சந்ததி படிக்கநேரிடும்.

      —–ஒரு  சராசரி இந்தியன் ஆனந்தன் —–

இளமை மறதி

The inspiration behind ‘இளமை மறதி’ stems from my struggle to recall common things as I seemingly grow ‘younger’ each day. While age undeniably influences memory, I find it astonishing how my grandfather effortlessly remembered the names of every Mahabharatham character during our summer holiday story sessions when he was in his late 70s.

What resonates with me in this piece is the parallel drawn with ‘Finding Nemo’ and the character Dory, highlighting the challenges of memory.

dory-and-image

சாவி வைத்த இடம் !
கைபேசியின் கடைசி எண் !
எங்கோ பார்த்த முகம் !
தொண்டைக்குழியில் சிக்கி
நின்ற பெயர் !
என எண்ணிலடங்கா மறதியின் 
பட்டியலில் 
ஆழ்ந்திருந்த என்னை ,
தட்டி எழுப்பிய என்  தங்கையின் 
தோலைபேசி பிறந்தநாள் வாழ்த்து
நினைவூட்டியது..... 
என் முதுமையில்
கூட்டப்பட்ட மற்றோர் எண்ணை.

             —– ” இளமையுடன்”  ஆனந்தன் —–

இறைவி

The inspiration behind ‘இறைவி’ emerged from my recent two-year experience in India, where I encountered remarkable working-class women. Their dedication, assertiveness, and punctuality in handling daily tasks left me in awe. Recollections of the first 17 years of my life, starting with my mum, lingered in my thoughts—a routine that remains unchanged in many average-income, working-class Indian families.

What stands out for me in this piece is its meticulous depiction of the finer aspects of daily life.

iraivi-1

Happy Teachers day

The inspiration behind ‘Happy Teachers Day’ stemmed from the remarkable growth, interest, and emphasis we place on event days like ‘friendship day,’ ‘lovers day,’ ‘red shirt day,’ etc. Surprisingly, I never came across a post about Teachers’ Day in the social media groups I am affiliated with. This served as the catalyst for the piece.

What stands out for me is the simile used to liken teachers to the finishing touch.

radhakrishnan

மாதா, பிதாவிற்கு பின்
 குரு வென்றாலும் நம் 
 பள்ளி, கல்லூரியின்
 நாட்களின் பகல் நேர
 சிந்தனை சிற்பிகள் - ஆசான்கள்!

பாடங்களை நாம் வெறுத்த 
 அந்நாளிலும்  ,நெஞ்சில்
 நின்றோர் சிலர்

தமிழ் தாத்தா என ஓர் ஆசான்...
 கணிதம் புரிந்தால் zebra
 புரியாவிடில்  cobra என ஓர் ஆசான்..
 I saw you three going doubles yesterday in two wheeler என ஓர் PT ஆசான்..

இச்சிற்பிகளின் சாதனை தான் எத்தனை!

பாடத்தை அப்துலாய் பார்க்கும் அம்மாவாசை மாணவர்கள் ஓர்புறம்,
 சிவி இராமன், கலாம் என சிந்தனை
 சீமான்களுக்கும் தீனி மறுபுறம்

ஏணியாய் தன் முதுகைக்காண்பித்து,
 சுவர் என்ற பள்ளியில் சாய்ந்து,
 நம்மை தான் உயரா நிலைக்கு ஏற்றிவிட்டு
 அதேநிலையில் நின்று
 மிண்டும் மீண்டும் சாதனை
 செய்யும் இம்மகான்களுக்கு
 Valentines dayக்கு தரும் தாக்கத்தை
 Teachers dayக்கும் கொடுக்கலாமே!

வருடம் ஓருமுறை இச்சிற்பிகளை வணங்குவோமென
 "என்னையும்" படிக்கவைத்த ஆசான்களான
 என்  தாய்மாமன் திரு மேகனாதனுக்கும்
 என் தாய்க்கும்
 இக்கட்டுரை சமர்ப்பணம் 
                              -----என்றும் ஆனந்தன் -----


			

T20

The inspiration behind ‘T20’ stems from the extensive journey I’ve undertaken. This voyage has been marked by diverse events, some captivating and worth preserving as timeless memories, while others I wish to consign to oblivion. Recent incidents have prompted contemplation on the significance of choices made early in this expedition, realizing their profound impact on my present. Despite encountering rough patches, I find myself unable to retrace my steps; instead, I must persist and discover what lies ahead on the road ahead.

What I appreciate in this reflection is the segmentation of the century into distinct phases and the narrative it weaves.

இந்த நெடுந்தூர பயணத்தில் பல வருட நட்பிலும், உறவுகளிலும் சிலர் பிரிகின்றனர் சிலர் மறைகின்றனர்’

t20.png
ஐ இருபதில் மனித சரிதம்
வீட்டுத்திண்ணை  விளையாட்டு
ஞாயிறு மதியம் ஜஸ் வண்டி

மாலை நேர ஐஸ் பாய்
சூரியன் சுட்டெரித்தாலும் கிரிகட்,
மழை நீரில் காகிதக்கப்பல்
வருடம் ஒருமுறை வரும் பண்டிகை விடுப்பு
கோடை விடுமுறையின் கேளிக்கைகள்
தெருவின் திண்ணை நன்பர்கள்
முட்டி தேய்ந்து கற்ற hour cycle
தூர்தஷனில் வெள்ளி "ஒலியும் ஒளியும்"

வீட்டுப்பாட மூட்டைய
தூக்கிய கழுதையாய் - பதிநான்கு வருட பள்ளிக்கூடம் என
கடுகளவு கவலையின்றி
முடிந்தது முதல் இருபது

இரெண்டாம் இருபது தொடங்கியது
புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
சேரனின் ஆட்டோகிராப் நாட்களாய்
கல்லூரி முடிகிறது
பின் ஓர் கிடங்கு கனவுகளுடன்
ஒர் வேலைக்கு அல்லோல்பட்டு
படித்த படிப்பிற்கும் சுய அறிவிற்கும்

கடுகளவும் சம்மந்தமில்லா ஒர் வேலை
இதில் வாழ்க்கை துணைசேர்த்து
விஞ்ஞான வளர்சியின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து
பல புது உறவகள் என
புது சுமையேற்றி நிலைப்படுத்த
சாவி வைத்த இடம்
எங்கோ பார்த்த முகம் - என
சில மறதிகளை கடந்த
இந்த நெடுந்தூர பயணத்தில்
பல வருட நட்பிலும், உறவுகளிலும்
சிலர் பிரிகின்றனர் சிலர் மறைகின்றனர்

இரண்டாம் இருபதை
நான் - திரும்பிப்பார்க்கும் போது
நான் - சொன்ன திருமண வாழ்த்துக்களை விட
இரங்கல் செய்திகள் அதிகம்
என தோன்றியது - காரணம
காலம் நம்மை வேகமாக கடக்கிறது

மூன்றாம் இருபது
சற்றே அடியெடுத்து வைத்ததால்
பொறுத்திருங்கள்
நான் இதை கடக்கும் போது - நீங்களும்
ஒர் இருபதில் இருப்பீர்கள்

நிச்சயம் தொடரும் காத்திருப்போம்.....
                        -----என்றும் ஆனந்தன் -----

அண்ணாச்சியும் Harvard டும்

The inspiration for ‘அண்ணாச்சியும் Harvard டும்’ struck when I felt the urge to rewind three decades and revisit Perambur, where I spent my formative 17 years. The bustling corner shop and my observations on a typical weekday morning laid the foundation for this narrative.

What stands out to me in this script is my juxtaposition of their everyday actions as a natural flow of events with the more formal management teachings imparted within the confines of a Harvard classroom.

annachi

மழை, வெயில் பாராது
நாள் ஒன்று தவறாமல்
ஜந்து மணிக்கு மரக்கறிகளை அள்ளி,
ஆறு மணிக்கு வாயில் திறந்ததை
காண்பித்தது  - Time Management

இரெண்டே ஆத்மாக்கள்
அண்ணாச்சியும் ,
அரைக்கரை பனியனில்
ஒர் நிக்கர் சீடனும் ,
தேனீக்களாய் - தன் 100அடி குகைக்குள்
இது -  Space Management

வண்ண வய்ர் கூடை,
ஓரே நிற பிளாஸ்டிக் கூடை,
மஞ்ஞள் பை என
கூட்டமாய் வாடிக்கையாளர்கள் தன்
தேவைகளை குரலெழுப்பி கூவ

விலைக்கு வாங்கிய விடைத்தாளை பாதி கிழித்து ,
ஐம்பது  கிராம் பூண்டு மடக்கி
தொங்கிய சணல் கயிறில்
பொட்டலமாய்  சுற்றி,
அறுபட்ட  நுனிகள் முறுக்கி,
அரிசி மூட்டை மேல்
கூட்டுத்தொகைக்கு வைக்கப்பட்டதை
காண்பித்தது -  Material  and Packing Management

இதற்கிடையில், பொடியனின்
தேங்காய் பத்தைகள் "அவன்" அளவு
என குறை கூவல் விடுத்த பெண்மணிக்கு
ஓரு பத்தை இனாமாய் இட்டதை
காண்பித்தது - Customer Satisfaction Management

அண்ணா Bril Ink 5 பைசாவுக்கு
என்ற சிறுமிக்கு ,
அவள் பல் தடம் பதிந்த
பேனா கழுத்தை திரிகி
சொட்டும் சிந்தாமல்
ஊற்றப்பட்ட மை
சொன்னது - Perfection in Delivery Management

இதற்கிடையில்,
சீக்கிரம் - எவ்வளவாச்சி என்ற மூதாட்டிக்கு
காதிலிருந்த refill எடுத்து
உள்ளங்கையளவு தாளில்
எண் எழுதி கணக்கிட்டவாறு 
இடது கை ஒரு கொத்து
கறிவேப்பிலயை கொசுறாய்
பாட்டியின் பைக்குள் !
இது -   Customer Retention Techniques

மீண்டும் பாட்டியின்
துண்டு வாங்கி
நேற்றைய பாக்கி
70 பைசா கூட்டியதை
காட்டியது - Debt , Recovery and Data Management.

50ml எண்ணை எடுக்க
டின் சாய்து,
உடனே மேஜை புத்தகத்தில்
எழுதிய துணுக்கு
சொன்னது - Stock Management

மணி பத்தென்பதால்
டிபின் கூடையுடன் வந்த
அண்ணாச்சியின் மனைவி
சொன்னது - Resource and Shift Management

சில்லறை இல்லையென
மிட்டாய் தராமல்
கொத்தம்லி, ஓர் தக்காளி
என  துல்லியமாய் சமம்செய்ததை
சொன்னது - Sensible General Management

என அடுக்கிக்கொண்டே போகலாம்  !

நம் சமுதாயத்தில்
அன்றாட வாழ்வில்
நம்மோடு இருந்த இந்த
Harvard  ஆண்ணாச்சிகள்
MBA இல்லாவிடிலும்
படிக்காத மேதைகள்.
                          -----என்றும் ஆனந்தன் -----

சரி ?

The inspiration behind ‘சரி’ stems from the conversations I’ve engaged in or observed on the limited social media platforms I’m associated with. The essence is that it ultimately depends on the individual, shaping their perspective on events based on their core values and ethos.

What stands out to me in this script is the seamless connection between the title and the beginning of each sentence, creating a coherent flow.

tick

உயிர்மெய் சொல்லாம் சரி
மெய்க்கும் பொய்க்கும் சாயும் சரி
நானே என்றும் சரி
என்ற மனிதனை நிமித்தும் சரி
சொல்லின் சிறப்பு சரி
ஏனெனின்

தாய்க்கு குழந்தை சரி
குழந்தைக்கு தந்தை சரி
தந்தைக்கு "தான்" சரி
தானே தனக்கு சரி
தானும்  தொண்டனும் சரி
தொண்டனுக்கு தலைவன் சரி
தலைவனுக்கு வாதம் சரி
வாதத்திற்கு கொள்கை சரி
கொள்கைக்கு உண்மை சரி
உண்மைக்கு கவி சரி
கவிக்கு கருத்து சரி
கருத்திற்கு மதம் சரி
மதத்திற்கு இறைவன் சரி
என்றால்
இறைவா இதில் யார் சரி ?

நடுநிலை இல்லா இச்சரி
சரிந்தே நிற்பதால் - இருபுறமும்
பார்ப்பவர் கண்களில் மட்டும்
நடுநிலையில் நிற்குமாம் சரி

                                            —– “சரி” ந்தே ஆனந்தன் —–