நிழலின் நொடி

A Haiku is a traditional form of Japanese poetry that captures the essence of a fleeting moment in just three lines, typically following a syllable pattern of 5-7-5. Haiku often evoke imagery from nature, seasons, or human emotions, using concise and simple language to create profound reflections.

While my writings may not strictly adhere to the formal structure of Haiku, they aim to capture and convey emotions, ideas, and reflections in a similar spirit. Instead of focusing on syllabic constraints, my pieces prioritize delivering content that resonates with the reader, sparking thought and connection. They might not be Haiku in the traditional sense, but they carry the soul of meaningful brevity.

பிளிரி ஓடிய 

கோவில் யானைக்கு 

காரணம் சொன்னான் 

நாத்திகன்- மதமென்று 

————-

சில்லறை மறுத்து 

QR code உயர்த்தினார் 

எங்கள் பிச்சைக்காரர் – வறுமையில் வளர்ச்சி 

—————

Marathon ஓடுகிறதென்று 

கடிகாரத்தை கோபித்தால் – காதலி 

—————

மணிக்கு ஓர் முறை சேர்ந்தோமே 

முள்ளே வேண்டாமென்ற 

டிஜிட்டல் கடிகாரம் – பணக்கார வறுமை 

—————

உள்ளங்கையில் உறங்காமல் 

உலகே அதுவென்று 

இளைப்பில்லா வருடல் – கைபேசி 

—————

முகுந்துடன் அமரன்னனா 

அனைவருக்கும் கதையுண்டு 

என்றால் – மனைவி 

—————

உக்ரேனும் லெபனானும் 

பாலஸ்தீனும் மழையென 

மனிதன் – எருமை 

—————

நிமிர்ந்தே நின்றாலும் 

சில நேரங்களில் 

சாய்கிறது – நிழல் 

—————

ஆறறிவு இருந்தும் 

ஐந்தை மட்டும் 

சிக்கனமாகப் பரிமாறும் – நாம் 

—————

தந்தைக்கு அழகை 

ஆராதிக்க சொன்னால் – மகள் 

————-

வெள்ளை சட்டையில் 

பொட்டாய் ஓர் கறை- கொச்சை நகைச்சுவை 

—————

பகுத்தறிவு இருந்தும் 

பித்தனாய் வாழ்ந்தால் – ஞானி

 (ராஜா அல்ல இருந்தும் பொருந்தும்)

————-

நம் பிரிவு நிரந்தரமல்லவே 

பிறகேன் அழுகிறாய் 

என்றதாம் – பிணம் 

—————

தாத்தா இறந்ததற்கு 

முகப்புத்தகத்தில் லைக் 

போட்ட ஆத்மா – ஜென்சி 

—————

தாத்தா இறந்ததை 

ஏன் முகப்புத்தகத்தில் போட்டாய் 

என்ற ஆத்மா – பூமர் 

————-

ஹவாய் செருப்பிற்கு 

சேப்டி பின்னிட்டு 

ஆயுள் நீட்டும் ஆத்மா – 70s கிட் 

—————

யானையின் கால்வலிக்கு 

காலமுக்கும் யானைப்பாகன்

நம்பிக்கை ஆத்திகன் 

—————-

உன் மகிழ்ச்சிக்கு மட்டும் 

என்னை பயன்படுத்தினால்

நானும் மகிழ்வேன் 

என்றதாம் – கண்ணீர் 

—————

நிலவில் நடக்கும் நிலையிருந்தும் 

நிலாச்சோறு ஊட்டும் 

தாய் – மெச்சும் எளிமை

————-

Leave a comment