குழி

The imprint of pain often leaves a lasting scar, and there are certain occasions where this indelible mark endures forever. What more is there to express?

hands2

Audio File below

விஞ்ஞானம் வித்தாகி
வியாபார முத்தாகி
வியக்கும் சொத்தாகி
மூச்சி முட்ட முதிர்ந்தும்...

நிலவில் நடந்தும்
மழயை அளந்தும்
புயலை புரிந்தும்
இயற்கை உடலில்
செயற்கை பொருளாய்
மூச்சி முட்ட முதிர்ந்தும்...

அன்னாந்தே பார்த்து
ஆகாய ஆய்வில்
ஆழம் அறியாமல்
சிந்திக்க மறுத்த
சில்லரை இனமாய்
அடிப்படை மறந்து
மூச்சது முட்டவே
உன்னுதவி நாடினோம்...

பழி சொல்ல ஜீவனில்லை 
பழி ஏற்க நேரமில்லை
சற்றே உன் கரம் தாழ்த்தி
மீண்டுமோர் மழலையது
மூச்சி முட்டா உயிர் வாழ
உன் சுவாசம் வேண்டுகிறேன் - விஞ்ஞானமே 
நீ வியர்வைக்கும் வாழ்வு கொடேன்...

                            —— ஆனந்தன்