

AUDIO
சுமை
கூடே உலகமென உல்லாசக்குருவி
சுற்றமும் நட்புமென சுகமாய் திரிந்ததாம்
உயர்ந்து பறந்து பழகிய தருணம்
கைமண் கற்றதென
கடல் கடந்து பறந்ததாம்
கடினமாம் பாதையதில்
துணை சேர்த்த அக்குருவி
நீர் உறையும் நிலச்சதுப்பில்
கூடாரம் அமைத்ததாம்
தாய் வீட்டின் சீராட்டே
உலகமென திரிந்தகுருவி
புது வீட்டின் புகுதலில்
உணர்வுகள் உணர்ந்ததாம்,
பொருள்பல விளங்கியதாம்,
புத்துலகை பார்த்ததாம்
உறையும் குளிரிலும்
சிட்டாய் உழைத்ததாம்,
சிறப்பாய் சிந்தித்தாதம்,
சிந்தனை சீரானதாம்,
கால்பதித்த இடந்தோறும்
கரகோஷ கூடமானதாம்
தன்னையும் அறியாமல்
ரௌத்திரமும் பழகியதால்
ரௌத்திரம் ரௌத்திரமென,
சீற்றம் சூடானதாம்,
சீறிப்பாய்ந்ததாம்,
பலததை இழந்ததாம்
சற்றே தளர்ந்து
கண் அயர்ந்து
உணர்ந்ததாம்
தான்னறியா உருமாரிய
கருடன் தானென
களைந்தவை யாவும்
மக்கிய பொதியென
சமாதான சிரிப்பில்
மீண்டும் பறந்ததாம்
பொதியை உதிர்த்தும்
குறையா கனத்தால்
மீண்டும் கனப்பது
இதயமென
புரிந்தது கருட-குருவிக்கு.
—– கருடன்