மெரினா

marina

சிலைகளால் எனக்கு  பெருமையில்லை
சமாதிகளால்  எனக்கு  பெருமையில்லை
காதலர்களை குடும்பமாக்கியதில் பெருமையில்லை
வியாபாரங்களின் வாழ்வாதாரமென்றும் பெருமையில்லை
நீளக்கரையென்றும் பெருமையில்லை

மரபென்ற தரைப்பெயர்ந்து 
உணர்வுகளின்  சுனாமியாய்
வேற்றுமை மறந்து
அறவழி அலையென 
மனிதர்களாய்  உயர்ந்து நின்ற - உங்களை
என் கைகளிலேந்தி  
உலகுக்கு உயர்த்தி
இது ஒற்றுமையின் இனமென
உங்களுள் ஒருத்தியாய் நானும் நின்றதில்
முதல் முறையாய் பெருமைப்படுகிறேன்
என்றாள் மெரினா மனிதனைப்பார்த்து

                                 --  என ஆனந்தன்   --