நாளைய நம்பிக்கை

newyear2017

நாளை விடியுமென்பது - நம்பிக்கை 
நலமாய் விடியுமென்பது - நம்பிக்கை
இன்றைவிட இனிக்குமென்பது - நம்பிக்கை
அமைதியாய் இமை  மூடுமென்பது - நம்பிக்கை

ஒவ்வோர் புத்தாண்டும்
சிறப்பாய் அமையுமென
நம்பிக்கையில் அடிவைக்கின்றோம் !

மாதம் சில கடந்து திரும்பிப்பார்க்கையில்
முந்தைய ஆண்டு பசுமையென
ஒர் உணர்வு

எத்தணை மாற்றங்கள் 
இனத்தாலும், பணத்தாலும்
உள்நாட்டிலும் , உலகளவிலும்

திறனில்லா தலைவர்கள்
தரமில்லா கொள்கைகள்
திசையில்லா தொண்டர்களென
தொடர்கிறோம்

இனி வரும் வருடங்கள்
இனிமையாய் இருக்குமென 
உள்ளமது எற்க மறுக்கிறது
எனினும்
முயற்சியின் முன்னோடி
நம்பிக்கையெனும் உயிர்

கோபத்தை குறைத்து
விரோதத்தை தொலைத்து
தவற்றை மன்னித்து
அன்பால் அரவணைத்து
வீடும் , நாடும் அமைதியாய்
செழிக்குமென்ற நம்பிக்கையில்
மீண்டுமோர் புத்தாண்டில் அடிவைப்போம்
    
     ----- என நாளைய நம்பிக்கையில் ஆனந்தன்

Leave a comment