The following content is a tribute to all Tamil film directors who have consistently made a difference. This difference lies in their ability to reach a global audience and provoke thoughtful reflections. My memory recalls this trend dating back to the 1970s and onwards.
மகேந்திரன் - உறவுகளின் பாசத்தை வெளிச்சத்துக்கு கெணர்ந்தவர் இவரின் "முள்ளும் மலரும்", பூச்சூடவேண்டிய வாடா மலர் பாலச்சந்தர் - இயக்குனர் சிகரம் மட்டுமின்றி , கலைஞர்களை கண்டெடுத்த கலைமாமணி இவரின் "தண்ணீர் தண்ணீர்" இன்றும் தாகம் தீர்க்கும் பாரதிராஜா - கிராமிய வாடையை நெடியின்றி அளித்தவர் இவரின் "கிழக்கே போகும் ரயில்" இன்றும் கிராமத்து விருந்து பாலுமகேந்திரா - காதல் தரைமுட்டாத ஆழம் என்ற காதல் கள்வன் இவரின் "மூன்றாம் பிறை" அம்மாவாசையின் மழுநிலவு விசு - நான்கு சுவர்களுக்குள் இருக்கும் நான்கு கோடி உணர்வுகளை திரையில் உணர்த்தியவர். இவரின் "சம்சாரம் அது மின்சாரம்" படமல்ல பாடம் கமல் - படைப்பு பாதி துடைப்பு பாதியென வியக்க வைத்த உழைப்பாளி இவரின் "Hey Ram" பிரிவினையின் பாடம் மணி- தமிழ் திறைக்கு "class" என்ற இரத்தினத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் இவரின் "கன்னத்தில் முத்தமிட்டால்" மறு கன்னத்தையும் காட்டச்சொல்லும் சேரன் - இருக்கமான உணர்வுகளுக்கு தண்ணீர் தெளித்தவர் இவரின் "Autograph" பல இளைஞர்களின் கண்ணாடி ஷங்கர் - பிரம்மாண்டத்தின் பிரம்மா இவரின் "முதல்வனால்" சராசரி மனிதனும் சிந்தித்தான் பாலா - பாலுமகேந்திரா என்ற துரோனரை மிஞ்சிய கொடூற சிஷ்யன் இவரின் "பிதாமகன்" மொழிகளுகக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் படைப்பு வாசுதேவ மேனன் - சுயசரிதையின் தந்தை இவரின் "வாரணம் ஆயிரம்" வாழ்வின் வர்ணங்களை சித்தரித்த சரிதம் மிஷ்கின் - variety யின் விஞ்ஞானி இவரின் "ஓனாயும் ஆட்டுக்குட்டியும்" தமிழின் Bourne Ultimatum. வெற்றிமாரன் - நம் அன்றாட வாழ்வின் இருட்டான தருணங்களை அவர் ஆடுகளங்களில் ஒளியில் காட்டியவர் இவரது "விசாரனை" தமிழ் திரையை உலக அரங்கில் ஓரு கட்டம் மேல்நோக்கி நகர்த்திய படம்.
இவர்களுடன் இவ்வரிசையில் சேர தயாராகும் என் மைத்துணனுக்காக
----- ஆனந்தன் -----
மகேந்திரன் - உறவுகளின் பாசத்தை 





ஐ இருபதில் மனித சரிதம்