மெல்லினம்

The script ‘மெல்லினம்’ was born out of our society’s reluctance to accept children with learning disabilities as integral members. Embracing a more open-minded approach is crucial, as we hold the key to seamlessly integrating these budding individuals into our societal fabric.

justin



கடலது ஏற்க மறுக்கும்
மழை நீர் இவர்கள்

காடது ஏற்க மறுக்கும்
கொடி இவர்கள்

புயலது ஏற்க மறுக்கும்
தென்றல் இவர்கள்

கதிரவன் ஏற்க மறுக்கும்
தீபம் இவர்கள்

காப்பியம் ஏற்க மறுக்கும்
மொழி இவர்கள்

கலைக்கூடம் ஏற்க மறுக்கும்
சிலை இவர்கள்

சிற்பியின் பிழையா? - முழுதாய் வடிக்காதது
இறைவனுக்கும் பங்குண்டே!
மனவளர்ச்சி நமக்கிருந்தால்
அது குறைந்த பிஞ்சுகளை
நம்முள் அணைத்து உயிர்கொடுப்போம்.

       ----- என்றே ஆனந்தன் -----