The inspiration behind “கிழக்கும் – மேற்கும்” stems from my 15-year experience in the UK. Having lived there, I’ve had the opportunity to observe both sides of a seemingly ordinary daily coin, sparking a desire to compare the fundamental characteristics that distinguish Eastern and Western personalities. When I mention ‘East,’ the reader undoubtedly understands the specific region in the East that I am alluding to.
What I found intriguing about this theme was that, after completing the script, I delved into research articles on the same subject. I came across some well-crafted pieces that covered elements similar to those in the script. One that particularly caught my attention was by Yang Liu in 2007 (http://bsix12.com/east-meets-west/).

குடும்பமாய் சிந்தித்து அவன் கூட்டமாய் நிற்பான் சுயமாய் சிந்தித்து இவன் ஒற்றையாய் மோதுவான் இரண்டு மணி நேரம் சமைத்து அவன் இரண்டு நிமிடம் சுவைப்பான் இருபது நிமிடம் சமைத்து இவன் இரெண்டு மணி நேரம் ரசிப்பான் தலைவன் அவன் தற்பெருமையாய் நிற்பான் தலைவன் இவன் தொண்டனாய் நிற்பான் காதில் விழுந்ததை அவன் கலந்தே ஊதுவான் காதில் கேட்டதை இவன் இடமிந்து இசைப்பான் பிரச்சனை பந்தம் அவன் தானே அணையுமென்பான் பிரச்சனை பந்தம் இவன் கால்பதித்து அணைப்பான் சிறிதாய் செயலதை அவன் பெரிதாய் ஓதுவான் பெரிதாய் சாதனை இவன் சிறிதே என்பான் அலைமோதும் கூட்டத்திலும் அவன் அணியாய் செல்வான் அலை மோதும் கூட்டத்திலும் இவன் எறும்பென வரிசையில் நேரம் அவன் நுனிப்புல் நேரம் இவன் நாநலம் அடுக்களை பெண்களுக்கு அவன் வளர்ப்பில் அடுக்களை ஆடுகளம் ஆணுக்கு இவன் வளர்ப்பில் ருசிக்கும், பசிக்கும் அவன் உணவாம் ஆரோக்கிய வாழ்விற்கே இவன் உணவாம் சொல்லின் செல்"வோனாம்" அவன் சொல்லாததை செய்வான் சொல்லின் செல்வனாம் இவன் சொன்னதை செய்வான் கற்றது கடலாம் அவன் கரை ஒதுங்கான் கற்றது கடுகாம் இவன் வெடித்தே சுவைப்பான் தவறைச்சுட்டினால் அவன் படபடத்து குறுகுவான் தவறைச்சுட்டினால் இவன் தவறறிந்து திருந்துவான் வழங்கல் அவன் உடையின் ஊனம் வழங்கல் இவன் உடையின் உயிர் கிழக்கும் மேற்கும் உடையாலும், உணவாலும், உருவாலும் வேறுபட்டாலும் மனிதனென்ற உணர்விலாது ஒன்றாகலாமே? ----- என்றும் ஆனந்தன் ----