The inspiration behind ‘T20’ stems from the extensive journey I’ve undertaken. This voyage has been marked by diverse events, some captivating and worth preserving as timeless memories, while others I wish to consign to oblivion. Recent incidents have prompted contemplation on the significance of choices made early in this expedition, realizing their profound impact on my present. Despite encountering rough patches, I find myself unable to retrace my steps; instead, I must persist and discover what lies ahead on the road ahead.
What I appreciate in this reflection is the segmentation of the century into distinct phases and the narrative it weaves.
‘இந்த நெடுந்தூர பயணத்தில் பல வருட நட்பிலும், உறவுகளிலும் சிலர் பிரிகின்றனர் சிலர் மறைகின்றனர்’
‘
ஐ இருபதில் மனித சரிதம் வீட்டுத்திண்ணை விளையாட்டு ஞாயிறு மதியம் ஜஸ் வண்டி மாலை நேர ஐஸ் பாய் சூரியன் சுட்டெரித்தாலும் கிரிகட், மழை நீரில் காகிதக்கப்பல் வருடம் ஒருமுறை வரும் பண்டிகை விடுப்பு கோடை விடுமுறையின் கேளிக்கைகள் தெருவின் திண்ணை நன்பர்கள் முட்டி தேய்ந்து கற்ற hour cycle தூர்தஷனில் வெள்ளி "ஒலியும் ஒளியும்" வீட்டுப்பாட மூட்டைய தூக்கிய கழுதையாய் - பதிநான்கு வருட பள்ளிக்கூடம் என கடுகளவு கவலையின்றி முடிந்தது முதல் இருபது இரெண்டாம் இருபது தொடங்கியது புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் சேரனின் ஆட்டோகிராப் நாட்களாய் கல்லூரி முடிகிறது பின் ஓர் கிடங்கு கனவுகளுடன் ஒர் வேலைக்கு அல்லோல்பட்டு படித்த படிப்பிற்கும் சுய அறிவிற்கும் கடுகளவும் சம்மந்தமில்லா ஒர் வேலை இதில் வாழ்க்கை துணைசேர்த்து விஞ்ஞான வளர்சியின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து பல புது உறவகள் என புது சுமையேற்றி நிலைப்படுத்த சாவி வைத்த இடம் எங்கோ பார்த்த முகம் - என சில மறதிகளை கடந்த இந்த நெடுந்தூர பயணத்தில் பல வருட நட்பிலும், உறவுகளிலும் சிலர் பிரிகின்றனர் சிலர் மறைகின்றனர் இரண்டாம் இருபதை நான் - திரும்பிப்பார்க்கும் போது நான் - சொன்ன திருமண வாழ்த்துக்களை விட இரங்கல் செய்திகள் அதிகம் என தோன்றியது - காரணம காலம் நம்மை வேகமாக கடக்கிறது மூன்றாம் இருபது சற்றே அடியெடுத்து வைத்ததால் பொறுத்திருங்கள் நான் இதை கடக்கும் போது - நீங்களும் ஒர் இருபதில் இருப்பீர்கள் நிச்சயம் தொடரும் காத்திருப்போம்.....
-----என்றும் ஆனந்தன் -----
ஐ இருபதில் மனித சரிதம்