அண்ணாச்சியும் Harvard டும்

The inspiration for ‘அண்ணாச்சியும் Harvard டும்’ struck when I felt the urge to rewind three decades and revisit Perambur, where I spent my formative 17 years. The bustling corner shop and my observations on a typical weekday morning laid the foundation for this narrative.

What stands out to me in this script is my juxtaposition of their everyday actions as a natural flow of events with the more formal management teachings imparted within the confines of a Harvard classroom.

annachi

மழை, வெயில் பாராது
நாள் ஒன்று தவறாமல்
ஜந்து மணிக்கு மரக்கறிகளை அள்ளி,
ஆறு மணிக்கு வாயில் திறந்ததை
காண்பித்தது  - Time Management

இரெண்டே ஆத்மாக்கள்
அண்ணாச்சியும் ,
அரைக்கரை பனியனில்
ஒர் நிக்கர் சீடனும் ,
தேனீக்களாய் - தன் 100அடி குகைக்குள்
இது -  Space Management

வண்ண வய்ர் கூடை,
ஓரே நிற பிளாஸ்டிக் கூடை,
மஞ்ஞள் பை என
கூட்டமாய் வாடிக்கையாளர்கள் தன்
தேவைகளை குரலெழுப்பி கூவ

விலைக்கு வாங்கிய விடைத்தாளை பாதி கிழித்து ,
ஐம்பது  கிராம் பூண்டு மடக்கி
தொங்கிய சணல் கயிறில்
பொட்டலமாய்  சுற்றி,
அறுபட்ட  நுனிகள் முறுக்கி,
அரிசி மூட்டை மேல்
கூட்டுத்தொகைக்கு வைக்கப்பட்டதை
காண்பித்தது -  Material  and Packing Management

இதற்கிடையில், பொடியனின்
தேங்காய் பத்தைகள் "அவன்" அளவு
என குறை கூவல் விடுத்த பெண்மணிக்கு
ஓரு பத்தை இனாமாய் இட்டதை
காண்பித்தது - Customer Satisfaction Management

அண்ணா Bril Ink 5 பைசாவுக்கு
என்ற சிறுமிக்கு ,
அவள் பல் தடம் பதிந்த
பேனா கழுத்தை திரிகி
சொட்டும் சிந்தாமல்
ஊற்றப்பட்ட மை
சொன்னது - Perfection in Delivery Management

இதற்கிடையில்,
சீக்கிரம் - எவ்வளவாச்சி என்ற மூதாட்டிக்கு
காதிலிருந்த refill எடுத்து
உள்ளங்கையளவு தாளில்
எண் எழுதி கணக்கிட்டவாறு 
இடது கை ஒரு கொத்து
கறிவேப்பிலயை கொசுறாய்
பாட்டியின் பைக்குள் !
இது -   Customer Retention Techniques

மீண்டும் பாட்டியின்
துண்டு வாங்கி
நேற்றைய பாக்கி
70 பைசா கூட்டியதை
காட்டியது - Debt , Recovery and Data Management.

50ml எண்ணை எடுக்க
டின் சாய்து,
உடனே மேஜை புத்தகத்தில்
எழுதிய துணுக்கு
சொன்னது - Stock Management

மணி பத்தென்பதால்
டிபின் கூடையுடன் வந்த
அண்ணாச்சியின் மனைவி
சொன்னது - Resource and Shift Management

சில்லறை இல்லையென
மிட்டாய் தராமல்
கொத்தம்லி, ஓர் தக்காளி
என  துல்லியமாய் சமம்செய்ததை
சொன்னது - Sensible General Management

என அடுக்கிக்கொண்டே போகலாம்  !

நம் சமுதாயத்தில்
அன்றாட வாழ்வில்
நம்மோடு இருந்த இந்த
Harvard  ஆண்ணாச்சிகள்
MBA இல்லாவிடிலும்
படிக்காத மேதைகள்.
                          -----என்றும் ஆனந்தன் -----

Leave a comment