​பெண்ணே “ஓ” பெண்ணே

The concept behind ‘பெண்ணே “ஓ” பெண்ணே’ delves into the transformative way we perceive the world, now seemingly at our fingertips. It explores the profound impact of a simple application that connects us with ‘lost and found’ friends and family, leaving me amazed.

What captivated me in this piece was how it captivates the reader initially with the attributes of a homely girl, only to unfold at the end and reveal the true identity.

whatsapp
உள்ளங்கையில் உலகத்தை 
வருட வைத்தவர் 
Steve jobs  எனினும் 
அவ்வுலகம் பசுமையானது
உன்னால் !

மறந்து  போன உறவுகள்,
தொலைந்து போன நட்பு,
முகம் தெரியா முன்னோடிகள்,
என எண்ணிலடங்கா உணர்வுகள்
உயிர்த்தெழுந்தது 
உன்னால் !

மொ‌ழியில்லாது இசை மட்டுமா ?
உலகின் முக்கோண மூலைகளிருந்து 
உள்ளங்கையில் காணும் 
சித்திரங்களுக்கும், காட்சிகளுக்கும்
தான் !

உலகம் சூரியனை சுற்றுவதாய் 
எங்கள் மனித கூட்டம் பித்தாய் 
சுற்றுகிறது உன்னை 
பெண்ணே - whatsapp பெண்ணே !
                 ----- என்றும் ஆனந்தன் ----

இமயம்

The concept behind ‘இமயம்’ revolves around specific individuals I encountered in my brief journey. These remarkable personalities left me utterly astonished. They remain unknown to the rest of the world, as they perceive only their close family as their entire universe. To them, the external world appears too obscure and lackluster, incapable of grasping the thoughts harbored by these individuals. Laziness stands out as the foremost attribute that accompanies this group.

What intrigued me in this script was the attempt to convey each attribute in two lines, with each line concluding with the same word.


lazy
சோர்வே இல்லா
இமயம் இவன்

சிந்தனை சிற்பியின்
தலைவன் இவன்

வெள்ளை உலகை
காணா இவன்

இருட்டே உலகம்
என்றே இவன்

உலகம் அழுக்கென 
சொல்லி  இவன்

அறையே உலகம் 
அமத்தான் இவன்

குடும்பமே வேலியாய்
வளைத்தான் இவன்

உணவும்  துல்லியம்
என்பான் இவன்

பொரித்த மீனே
மதியம் இவன்

செய்யும் செயலில்
அர்ஜுனன் இவன்

உலகம் காணா
புதைபொருள் இவன்

உலகம் வியக்க
வெளிவர காத்திருக்கும் 
                       ----- நான் ஆனந்தன் ----


			

தமிழ் Film directors – a tribute with a salute

The following content is a tribute to all Tamil film directors who have consistently made a difference. This difference lies in their ability to reach a global audience and provoke thoughtful reflections. My memory recalls this trend dating back to the 1970s and onwards.

         
movie_snap
மகேந்திரன் - உறவுகளின் பாசத்தை வெளிச்சத்துக்கு கெணர்ந்தவர்
இவரின் "முள்ளும் மலரும்",  பூச்சூடவேண்டிய வாடா மலர்

பாலச்சந்தர் - இயக்குனர் சிகரம் மட்டுமின்றி , 
கலைஞர்களை கண்டெடுத்த கலைமாமணி
இவரின் "தண்ணீர் தண்ணீர்" இன்றும் தாகம் தீர்க்கும்

பாரதிராஜா - கிராமிய வாடையை நெடியின்றி அளித்தவர்
இவரின் "கிழக்கே போகும் ரயில்" இன்றும்  கிராமத்து விருந்து

பாலுமகேந்திரா -  காதல் தரைமுட்டாத ஆழம் என்ற காதல் கள்வன்
இவரின் "மூன்றாம் பிறை" அம்மாவாசையின் மழுநிலவு

விசு -  நான்கு சுவர்களுக்குள் இருக்கும் நான்கு கோடி உணர்வுகளை திரையில்
உணர்த்தியவர். 
இவரின் "சம்சாரம் அது மின்சாரம்" படமல்ல பாடம்

கமல் - படைப்பு பாதி துடைப்பு பாதியென வியக்க வைத்த உழைப்பாளி
இவரின் "Hey Ram"  பிரிவினையின்  பாடம்

மணி- தமிழ் திறைக்கு "class"  என்ற இரத்தினத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் 
இவரின் "கன்னத்தில் முத்தமிட்டால்" மறு கன்னத்தையும் காட்டச்சொல்லும்

சேரன் - இருக்கமான உணர்வுகளுக்கு தண்ணீர் தெளித்தவர்
இவரின்  "Autograph" பல இளைஞர்களின் கண்ணாடி

ஷங்கர் - பிரம்மாண்டத்தின் பிரம்மா
இவரின் "முதல்வனால்" சராசரி மனிதனும் சிந்தித்தான்

பாலா -  பாலுமகேந்திரா என்ற துரோனரை மிஞ்சிய கொடூற சிஷ்யன் 
இவரின் "பிதாமகன்" மொழிகளுகக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் படைப்பு

வாசுதேவ மேனன் - சுயசரிதையின் தந்தை 
இவரின் "வாரணம் ஆயிரம்" வாழ்வின் வர்ணங்களை சித்தரித்த சரிதம்

மிஷ்கின்  - variety யின் விஞ்ஞானி
இவரின் "ஓனாயும் ஆட்டுக்குட்டியும்" தமிழின் Bourne Ultimatum.

வெற்றிமாரன் - நம் அன்றாட வாழ்வின் இருட்டான தருணங்களை அவர் ஆடுகளங்களில் ஒளியில் காட்டியவர் 
இவரது "விசாரனை" தமிழ் திரையை உலக அரங்கில் ஓரு கட்டம் மேல்நோக்கி 
நகர்த்திய படம்.
இவர்களுடன்  இவ்வரிசையில் சேர தயாராகும் என் மைத்துணனுக்காக  
                                                      ----- ஆனந்தன் -----

கலாம் ஐயா! -இரங்கல்

apj

விஞ்ஞானியாய்,
எழுத்தாளனாய் ,
ஆசிரியனாய் ,
தலைவனாய் 
பலகோடி இருந்தாலும் 
இவையனைத்தும் ஒர் உருவாய்
கண்ணதாசனின் வரிகளாய்
இவர்போல யாரெண்று
வாழ்ந்து வழிகாட்டிய
உம்மைபோன்ற 
மாமனிதரை 
பிரம்மனே நினைத்தாலும் 
மறுபிறவி கொடுக்கயியலாது.
                     -----என்று ஆனந்தன் -----

நா.முத்து – இரங்கல்

na-muthukumar

இது கவிதையல்ல 
ஓர் இரங்கல்

அவனுக்கும் எனக்கும் 
ஓர் பனிப்போர் என்றாலும் 
அவனை மிருகமாய் 
கோபித்த சில நாட்களில் 
Aug 14, 2016 ரும் ஒர் நாள் 
வேறு யாரை  - ஆண்டவனை.

ஆம் என் வழியால் பிறர்க்கழுத
மற்றுமோர் நாள் 
நா.முத்து  வை குமரனாகவே 
ஆண்டவன் அழைத்துச்சென்ற 
அந்த நாள்

அவரின் சில படைப்புகளை 
மட்டுமே கடந்த நான் 
உறைந்து நின்ற வரிகள் 
தேசிய விருது பெற்ற
பாடல்களுக்கல்ல 
ஒரு மகனாய்  தந்தையின் 
பாசத்தை உணர்த்திய 
இவ்வரிகளுக்காக. ...

" தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே 
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின் அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா 
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா 
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
........
........
.........
வளர்ந்ததுமே யாவரும் தீவாய்ப் போகிறோம் 
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம் 
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை "

ஜயா ஆண்டவா 
உன்னை மன்றாடிக்கேட்கிறேன்
படைப்பாளிகளை வாழ
விட்டுத்தொலையும்

அன்னாரின் ஆத்மா 
சாந்தியடைய வேறு வழியின்றி
உன்னையே வேண்டும் நான்
               -----என்று ஆனந்தன் -----

 

சதுரங்க கோட்டை

The essence of ‘சதுரங்க கோட்டை’ is rooted in the intricate nature of life. Life is a struggle, where some emerge victorious while others face setbacks, and I aimed to portray this complexity. What stands out to me in this piece is the juxtaposition of the complex game of chess with the simplicity of the game of snake and ladder.
chess_and_snake_andladder
 வாழ்க்கையது சதுரங்கம்
 கட்டங்கள் அதன்
 உறவுகளும்,  நட்பும்
 கருப்பும் வெள்ளையுமாய் !

இதில் உள்ளடங்கி
உறங்கும் பர்மபதம்

இரண்டே கட்டங்களில்
ஏற்றமும், இறக்கமும் !

ஏணியின் கட்டங்கள்
உன் எண்ணங்கள் !

நாகத்தின் கட்டங்கள் 
உன் எதிர்பார்ப்பு !

இவற்றை தாண்ட
நாம் ஞானியல்ல

ஏணி கட்டங்களில்
எண்ணங்களை உயர்த்துவோம்

நாக கட்டங்களில் 
ஏக்கத்தை குறைப்போம்

உறவுகள் உருக்கமாகும்
நட்பது இறுக்கமாகும்
வாழ்க்கை எளிமையாகும் 
பொழுது இனிமையாகும் 
               -----என்றும் ஆனந்தன் -----

பொருமை

The inspiration behind ‘பொருமை’ revolves around the mind of an average and balanced Indian. Neither a saint nor a huntsman, he meticulously evaluates his stance and issues a cautionary statement.

What captivated me in this piece is how it gradually builds frustration, expressing underlying anger. However, it subtly conveys a message about the existence of ‘Religion’ without specifying any particular faith, allowing each reader to grasp the intended message.

dormant-volcano

எலியாரே,
எட்டனிக்கும் இச்சிங்கம்
உப்பில்லா உணவருந்தி
உணர்வில்லா நிக்குமென
துள்ளி நீர் குதிக்காதீர்

காந்தியெனும் எம் தாத்தனின்
அகிம்சை உணவூட்டியதில்
மறுகன்னம் காட்டி,காட்டி
காட்ட வேறு கன்னமின்றி
கண்கள் சிவந்து
எரிமலையாய் பொதிந்துள்ளோம்

பிரித்து விட்டால்
மதித்து வாழ்வீர்
என முன்னோர் செய்த
ஒர் தவறை
பகடைக்காயாக்கி
வேர்வை சிந்தி படித்த எம்மக்களை
ஆக்கமாய் வாழவிடாமல்
அழிவுக்கு போராட வைத்து
பிண்டமா வைக்கிரீர்

யாவரும் சமம் உம்வாய்மொழியில்
எம்மையாண்ட கலாம்,
இசை மேதை ரகுமான்
உங்களில் யார்?

உறியை நீர் தொட்டீர்
அகிம்சை எல்லைக்கோட்டை
யாம் தொட்டோம்
எழுந்து மட்டும் நின்றால்
உறியடியாய் சிந்தி சிதறுவீர்
பாரதியின் வரியாய்
மோதி யாம் மிதித்தால்
உமிழ ஓர் முகமிருக்காது

வேற்று கிரகத்தான் எட்டிப்பார்த்தால்
முகம் சுளித்து விலகிச்செல்வான் !
மதம் என்ற ஆடை
உம்மை நிலைப்படுத்த
அதை ஆயுதமாக்கி
ஏனையா அம்மணமாய் நிற்கின்றீர்?

உமக்கு இறுதி எச்சரிக்கை – சீண்டாதீர்
உமது தேசம் பாலைவனம்
என அடுத்த சந்ததி படிக்கநேரிடும்.

      —–ஒரு  சராசரி இந்தியன் ஆனந்தன் —–

இளமை மறதி

The inspiration behind ‘இளமை மறதி’ stems from my struggle to recall common things as I seemingly grow ‘younger’ each day. While age undeniably influences memory, I find it astonishing how my grandfather effortlessly remembered the names of every Mahabharatham character during our summer holiday story sessions when he was in his late 70s.

What resonates with me in this piece is the parallel drawn with ‘Finding Nemo’ and the character Dory, highlighting the challenges of memory.

dory-and-image

சாவி வைத்த இடம் !
கைபேசியின் கடைசி எண் !
எங்கோ பார்த்த முகம் !
தொண்டைக்குழியில் சிக்கி
நின்ற பெயர் !
என எண்ணிலடங்கா மறதியின் 
பட்டியலில் 
ஆழ்ந்திருந்த என்னை ,
தட்டி எழுப்பிய என்  தங்கையின் 
தோலைபேசி பிறந்தநாள் வாழ்த்து
நினைவூட்டியது..... 
என் முதுமையில்
கூட்டப்பட்ட மற்றோர் எண்ணை.

             —– ” இளமையுடன்”  ஆனந்தன் —–

இறைவி

The inspiration behind ‘இறைவி’ emerged from my recent two-year experience in India, where I encountered remarkable working-class women. Their dedication, assertiveness, and punctuality in handling daily tasks left me in awe. Recollections of the first 17 years of my life, starting with my mum, lingered in my thoughts—a routine that remains unchanged in many average-income, working-class Indian families.

What stands out for me in this piece is its meticulous depiction of the finer aspects of daily life.

iraivi-1