யுத்தமில்லா பூமியும் வண்ண விண்மீன்களும்எனக்கும் ஆசைதான்நிறைவேறும் ஆசைகளைநாம் அடுக்குவோமேநிழல் குடையில் நிற்கும் பேருந்துசில்லறை அளிக்கும் நடத்துனர்மீட்டரில் ஓடும் ஆட்டோவேகத்தடை வீதிகள்ஊனமில்லா சக்கர வண்டிக்கு ஓர் சறுக்குப்பாதை
கட்டணம் இல்லா கோவில்கள்பிஞ்சுகள் இல்லா பட்டாசுத்தொழில்பீத்தல் இல்லா சீருடையில் மாணவர்கள் கடைகள் இல்லா நடை பாதைகள்எச்சில் இல்லா இரயில் நிலையம்மின்வெட்டு இல்லா கிராமங்கள்
சங்கிலி இல்லா கோடைமோர் கோப்பை
அன்பால் கண்டிக்கும் பெற்றொர்ஆழத்தை புகட்டும் ஆசிரியர்தாயின் பெயருள்ள விண்ணப்ப படிவங்கள்தந்தையின் முகம் தெரிந்த பள்ளிகள்பொழுதோடு போய் வர திறமைக்கு ஓர் பிழைப்புகுப்பைத் தொட்டியில் குப்பைகள்நீர் வழியம் நீர்நிலைகள்விசாலமாய் வாழும் விவசாய்கள்தன்னை வருத்தா பக்தர்கள்
இல்லை என சொல்லா ரேஷன் கடைவரிசைக்கு பழகிய நம்மக்கள்உள்ளதைச்சொல்லி சொன்னதைச்செய்யும் முழு செயல் வாதிகள்அரை-செயல்-வாதிகள் அல்ல
என நம்மால் நிறைவேறும் ஆசைகள் உயிர் பெற்றால்நாமும் சிங்கம் சிங்கப்பூர் - இக்கரையும் சீமையாகும்.